தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானவர்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதிதாக 23 ஆயிரத்து 310 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 நோயாளிகள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 65 ஆயிரத்து 21 படுக்கைகள் உள்ளன. அவற்றில் 29 ஆயிரத்து 640 படுக்கைகள் காலியாக உள்ளன. சென்னையின் 11,894 படுக்கைகளில் 3,899 படுக்கைகள் காலியாக உள்ளது.
அதேபோல் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தும் மையங்களில் 46 ஆயிரத்து 543 படுக்கைகள் உள்ளன. அதில் 30 ஆயிரத்து 22 படுக்கைகள் காலியாக இருக்கிறது. சென்னையில் 7 ஆயிரத்து 364 கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனிமைப்படுத்தும் மையங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் 4,033 படுக்கைகள் காலியாக உள்ளது.
மக்கள் நல்வாழ்வுத் துறை மே மாதம் 5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 695 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 23 ஆயிரத்து 286 நபர்களுக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாடு வந்த 24 நபர்களுக்கும் என 23 ஆயிரத்து 310 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 29 லட்சத்து 79 ஆயிரத்து 687 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் 12 லட்சத்து 72 ஆயிரத்து 602 நபர்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 311 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 20 ஆயிரத்து 62 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 29 ஆயிரத்து 512 என உயர்ந்துள்ளது. சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 73 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 94 நோயாளிகளும் என மேலும் 167 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 779 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:
சென்னை: 3,64,081
செங்கல்பட்டு: 88,192
கோயம்புத்தூர்: 86,261
திருவள்ளூர்: 65,110
சேலம்: 44,427
காஞ்சிபுரம்: 40,805
கடலூர்: 31,831
மதுரை: 34,631
வேலூர்: 29,109
தஞ்சாவூர்: 27,393
திருவண்ணாமலை: 24,851
திருப்பூர்: 28,861
கன்னியாகுமரி: 23,662
திருச்சிராப்பள்ளி: 26,156
தூத்துக்குடி: 26,544
திருநெல்வேலி: 27,806
தேனி: 21,776
விருதுநகர்: 21,243
ராணிப்பேட்டை: 22666
விழுப்புரம்: 20,688
ஈரோடு: 24,016
நாமக்கல் : 17,609
திருவாரூர்: 16,145
திண்டுக்கல்: 16,930
புதுக்கோட்டை: 14,392
கள்ளக்குறிச்சி: 13,172
நாகப்பட்டினம்: 14,844
தென்காசி: 12,740
நீலகிரி: 10,358
கிருஷ்ணகிரி: 16,525
திருப்பத்தூர்: 10,716
சிவகங்கை: 9,201
தருமபுரி: 10,478
ராமநாதபுரம் : 9,353
கரூர்: 8,737
அரியலூர்: 5,894
பெரம்பலூர்: 2,894
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,003
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,074
ரயில் மூலம் வந்தவர்கள்: 428
இதையும் படிங்க: கரோனா தடுப்பு விதி மீறல்: இரண்டாவது முறையாக ஃபைன் கட்டிய ஜிஆர்டி