தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 200-க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று! - தமிழ்நாட்டில் இன்று 158 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 158 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று

By

Published : Mar 7, 2022, 9:16 PM IST

சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று (மார்ச் 7) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 43 ஆயிரத்து 211 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 158 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 35 லட்சத்து 79 ஆயிரத்து 360 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 34 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 2,414 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமடைந்தவர்கள்எண்ணிக்கை

இவர்களில் மேலும் குணமடைந்த 512 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 10 ஆயிரத்து 740 என உயர்ந்துள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளியும் அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளியும் என இரண்டு பேர் இறந்துள்ளனர். இதனால், இறந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆயிரத்து 17 என உயர்ந்துள்ளது.

மாநில அளவில் 0.4 விழுக்காடு குறைவு

பரிசோதனை செய்பவர்களில் நோய்த் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மாநில அளவில் 0.4 விழுக்காடு என குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எதுவும் இல்லை" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Exclusive : உக்ரைன் போரில் பலியான கர்நாடக மாணவர் - என்ன நடந்தது... விளக்குகிறார் கோவை மாணவி!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details