சென்னை பெருநகர பகுதிகளின் மண்டலவாரியான கரோனா தொற்று பாதிப்பு நிலவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, இதுவரை ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 251 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 67 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 756 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற குறிப்பிட்ட மண்டலங்களில் நோய்த்தொற்று அதிகரித்துவருகிறது. 30 முதல் 39 வயதுடைய நபர்களே கரோனா தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 428 நபர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டாலும் குணமடைந்தோரின் விழுக்காடும் அதிகரித்துவருகிறது. சென்னையில் திரு.வி.க. நகர், ஆலந்தூர் ஆகிய இரண்டு மண்டலங்களைத் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் குணமடைந்தோரின் விழுக்காடு 90-க்கு மேல் உள்ளது.
மண்டல வாரியான குணமடைந்தோரின் பட்டியல்,
கோடம்பாக்கம் - 18,626 பேர்
அண்ணா நகர் - 18,433 பேர்
ராயபுரம் - 15,618 பேர்
தேனாம்பேட்டை - 15,793 பேர்
தண்டையார்பேட்டை - 13,471 பேர்