தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தைக் கடந்தது கரோனா! - chennai latest news

தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தை கடந்தது கரோனா
தமிழ்நாட்டில் 36 ஆயிரத்தை கடந்தது கரோனா

By

Published : May 21, 2021, 7:31 PM IST

Updated : May 21, 2021, 8:29 PM IST

19:29 May 21

தமிழ்நாட்டில் இன்று மேலும் 36,184 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.21) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் 1 லட்சத்து 65 ஆயிரத்து 953 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 36 ஆயிரத்து 178 நபர்களுக்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 6 நபர்களுக்கும் என, 36 ஆயிரத்து 184 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 54 லட்சத்து 19 ஆயிரத்து 598 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 17 லட்சத்து 70 ஆயிரத்து 988 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. 

அவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்து 24 ஆயிரத்து 478 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 லட்சத்து 76 ஆயிரத்து 761 என உயர்ந்துள்ளது. 

சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில், 168 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 299 நோயாளிகளும் என, 467 பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, இறந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 598 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் கடந்த வாரத்தில் 7 ஆயிரமாக இருந்த கரோனா வைரஸ் தொற்று, தற்போது குறைந்து 5,913 என பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் இன்று 109 பேர் இறந்தனர். பிற மாவட்டங்களிலும் வைரஸ் தொற்றினால் இறப்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்தவித இணை நோய்களும் இல்லாத 128 பேர் இன்று இறந்தனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மாவட்டம்  வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:  

சென்னை - 4,68,262 

செங்கல்பட்டு - 1,24,672 

கோயம்புத்தூர் - 1,31,744 

திருவள்ளூர் - 89,681 

சேலம் - 55,296 

காஞ்சிபுரம் - 55,543 

மதுரை - 53,243 

கடலூர் - 42,018 

திருச்சிராப்பள்ளி - 43,993 

திருப்பூர் - 44,000 

தூத்துக்குடி - 40,549 

திருநெல்வேலி - 38,724 

வேலூர் - 37,581 

தஞ்சாவூர் - 38,057 

ஈரோடு - 40,254 

கன்னியாகுமரி - 37,965 

திருவண்ணாமலை - 33,679 

தேனி - 30,726 

ராணிப்பேட்டை - 29,587 

விருதுநகர் -  29,140 

விழுப்புரம் - 28,282 

கிருஷ்ணகிரி - 26,455 

நாமக்கல் - 23,993 

திண்டுக்கல் - 22,778 

திருவாரூர் - 23,442 

நாகப்பட்டினம் - 22,402 

புதுக்கோட்டை - 19,154 

கள்ளக்குறிச்சி - 17,565 

தென்காசி - 18,448 

திருப்பத்தூர் - 17,957 

நீலகிரி - 14,429 

தருமபுரி - 15,113 

ராமநாதபுரம் - 13,787 

கரூர் - 13,224 

சிவகங்கை - 12,287 

அரியலூர் - 8,759 

பெரம்பலூர் - 5,674 

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004 

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075 

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

Last Updated : May 21, 2021, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details