தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Covid 19 ஆறு மாவட்டங்களில்  கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனாவின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்(Chief Minister Of TamilNadu) கூறியுள்ளார்.

By

Published : May 27, 2021, 4:02 PM IST

ஆறு மாவட்டங்களில் கரோனா தாக்கம் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்
ஆறு மாவட்டங்களில் கரோனா தாக்கம் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,

" ஊரடங்கு காரணமாக சென்னை, அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் மாவட்டம் வாரியாகத் தொற்றின் தாக்கத்தை ஆராய்ந்து பார்க்கும்போது, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது.

எனவே, இந்த மாவட்டங்களில் தொற்றினைக் கட்டுப்படுத்தவும், உயிரிழப்புகளைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள மாவட்டங்கள்

’இந்த ஆறு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் அரசு, தனியார் மருத்துவனைகளில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு வசதிகள் கொண்டுள்ள மாவட்டங்கள் ஆகும். இந்த கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நோயாளிகளுக்குத் தேவையான படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிபடுத்த வேண்டும்.

நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த மாவட்டங்களில் நன்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து அப்பகுதிகளில் கூடுதலாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நோய்த்தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்' என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஆறு மாவட்டங்களில் கரோனா தாக்கம் கட்டுக்குள் வரவில்லை: முதலமைச்சர் ஸ்டாலின்

முனைப்புடன் செயல்பட வேண்டும்

மேலும், 'தடுப்பூசி போடும் பணியைப் பொறுத்தவரை கோவை, சேலம் மாவட்டங்களில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. மற்ற நான்கு மாவட்டங்களிலும் 18 வயதில் இருந்து 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி விரைந்து கிடைத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கரோனா இரண்டாம் அலையில் நோய்ப் பரவல் கிராமப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு நோய்ப் பரவாமல் தடுக்க வேண்டும்.

கரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றியடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க:ஊரடங்கு: வீதிகளில் உணவின்றி அல்லல்படும் விலங்குகளுக்கு உதவுங்கள்!

ABOUT THE AUTHOR

...view details