இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஏப்.19) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியருப்பதாவது:
"தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 533 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து 10 ஆயிரத்து 916 நபர்களுக்கும், தமிழ்நாட்டுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 25 நபர்களுக்கும் என 10 ஆயிரத்து 941 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 9 லட்சத்து 56 ஆயிரத்து 848 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் 10 லட்சத்து 2 ஆயிரத்து 392 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 75 ஆயிரத்து 116 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 6 ஆயிரத்து 172 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 14 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் 44 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 157 ஆக உயர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 28 வயது பெண் ஒருவர் எவ்வித இணை நோய்களும் இல்லாமல் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்துள்ளார்.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 2,86,569
கோயம்புத்தூர் - 68,137
செங்கல்பட்டு - 67,480
திருவள்ளூர் - 51,603
சேலம் - 36,283
காஞ்சிபுரம் - 33,800
கடலூர் - 27,828
மதுரை - 24,891
வேலூர் - 23,356
தஞ்சாவூர் - 22,480
திருவண்ணாமலை - 21,121
திருப்பூர் - 22,516
கன்னியாகுமரி - 19,078
திருச்சிராப்பள்ளி - 19,202
தூத்துக்குடி - 18,823
திருநெல்வேலி - 18,650