தமிழ்நாட்டில் நேற்று 249 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 14,065 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் இந்த பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.
சென்னையில் 124 பேருக்கும் , செங்கல்பட்டில் 40 பேருக்கும் , கோவையில் 20 பேருக்கும் , காஞ்சிபுரத்தில் 12 பேருக்கும் , திருவள்ளூரில் 11 பேருக்கும் , குமரியில் 7 பேருக்கும் , சிவகங்கையில் 5 பேருக்கும் , கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையில் 4 பேருக்கும் , சேலம் மற்றும் நெல்லையில் தலா 3 பேருக்கும் , திருச்சி , வேலூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேருக்கும் , தஞ்சை , தூத்துக்குடி , அரியலூர் , கடலூர் , திண்டுக்கல் , கரூர் , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் , விமானம் வழியாக வந்தவர்களில் 7 பேருக்கும் பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 332 ஆக உயர்ந்துள்ளது.