சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையான 2 ஆயிரம் ரூபாய், அதனுடன் சேர்த்து 14 மளிகைப் பொருள்கள் விநியோகிக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் இன்று தொடங்கியது.
கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு 4000 ரூபாய் வழங்கப்படுமென ஏற்கனவே தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. தமிழ்நாடு முழுவதும் இரண்டு கோடியே ஒன்பது லட்சம் குடும்ப அட்டைக்கு இந்த நிவாரணம் சென்றடைகிறது.
2000 ரூபாய் வழங்கும் பணி தொடக்கம் அதன்படி முதல் தவணையான 2000 ரூபாய் மே மாதம் கொடுக்கப்பட்டது. இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாவது தவணைத் தொகையான 2000 ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. அதனுடன் சக்கரை, உப்பு, கோதுமை மாவு உள்ளிட்ட 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை மக்களுக்கு ரேஷன் ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
முதல் தவணை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த மாத இறுதிக்குள் அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2000 ரூபாய், 14 மளிகை பொருள்கள் வழங்கும் பணி முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: உலக பேமஸான சீன யானைகளின் அட்ராசிட்டீஸ் - முழு வீடியோ