தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 33,658 பேருக்குக் கரோனா - chennai tamil news

தமிழ்நாட்டில் இன்று (மே.15) 33,658 பேருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 33,905 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று 33,905 பேருக்கு கரோனா

By

Published : May 15, 2021, 10:52 PM IST

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் 1,64,945 மாதிரிகள் கரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில் 33,658 பேருக்குக் கரோனா உறுதியானது. அதில், 7 பேர் வெளிநாடு, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். 33,651 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதன் மூலம் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,65,035ஆக அதிகரித்து உள்ளது.

இன்று கரோனா உறுதியானவர்களில் 19,449 பேர் ஆண்கள், 14,209 பேர் பெண்கள். இதன் மூலம், கரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,37,535 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,27,462ஆகவும் அதிகரித்து உள்ளது. 20,905 பேர் கரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,39,887ஆக உயர்ந்தது.

303 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 125 பேர் தனியார் மருத்துவமனையிலும், 178 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17,359ஆக அதிகரித்து உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒடிசாவில் இருந்து வந்த ஆக்ஸிஜன்!

ABOUT THE AUTHOR

...view details