மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 51 ஆயிரத்து 492 நபர்களுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புதிதாக 502 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 82 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 38 ஆயிரத்து 842 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது 4 ஆயிரத்து 532 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 517 பேர் குணமடைந்து இன்று(பிப்.1) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 21 ஆயிரத்து 947 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் என மேலும் 7 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு:-
சென்னை 2,31,424
கோயம்புத்தூர் 54,444
செங்கல்பட்டு 51579
திருவள்ளூர் 43563
சேலம் 32428
காஞ்சிபுரம் 29265
கடலூர் 24,940
மதுரை 21,011
வேலூர் 20751
திருவண்ணாமலை 19362
தேனி 17078
தஞ்சாவூர் 17697
திருப்பூர் 17920
விருதுநகர் 16569
கன்னியாகுமரி 16838
தூத்துக்குடி 16277
ராணிப்பேட்டை 16125
திருநெல்வேலி 15577