சென்னை: தமிழ்நாட்டில் கரோனா நிலவரம் குறித்து மாநில பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 282 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில், 1,669 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 4 கோடியே 40 லட்சத்து 86 ஆயிரத்து 709 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
17 பேர் உயிரிழப்பு
அதில் 26 லட்சத்து 42 ஆயிரத்து 30 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளானது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,565 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 89 ஆயிரத்து 899 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 288 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே மத்திய சுகாதாரத்துறை அடுத்த மூன்று மாதங்கள் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,47,268
கோயம்புத்தூர் - 2,39,820
செங்கல்பட்டு - 1,67,309
திருவள்ளூர் - 1,16,910
சேலம் - 97,151
திருப்பூர் - 91,841
ஈரோடு - 1,00,450
மதுரை - 74,277
காஞ்சிபுரம் - 73,435
திருச்சிராப்பள்ளி - 75,254
தஞ்சாவூர் - 72,401
கன்னியாகுமரி - 61,417
கடலூர் - 62,933
தூத்துக்குடி - 55,663
திருநெல்வேலி - 48,641
திருவண்ணாமலை - 53,876
வேலூர் - 49,146