சென்னை:சுகாதாரத்துறை இன்று (அக்.2) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 855 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் 1,578 நபர்களுக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 64 லட்சத்து 89 ஆயிரத்து 759 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில் தமிழ்நாட்டிலிருந்த 26 லட்சத்து 66 ஆயிரத்து 964 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளன. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 46 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,607 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 14 ஆயிரத்து 291 என உயர்ந்துள்ளது.