தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொரோனாவால் தமிழ்நாடு உற்பத்தித் துறையில் பாதிப்பு இல்லை - அமைச்சர் எம்.சி. சம்பத்! - ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யா கேள்வி

சென்னை: தேசிய அளவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும் தமிழ்நாடு உற்பத்தித்துறையில் எந்த பாதிப்பும் இல்லை என சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்துள்ளார்.

Corona effect does not affect Tamil Nadu's manufacturing industry - Minister MC Sampath!
Corona effect does not affect Tamil Nadu's manufacturing industry - Minister MC Sampath!

By

Published : Mar 13, 2020, 5:41 PM IST

ஓசூர் தொகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு முன் வருமா என சட்டப்பேரவையில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யா கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், 'ஏற்கெனவே 348 நிறுவனங்கள் நல்ல முறையில் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. எனவே புதிய தொழில் தொடங்கும் திட்டம் அரசுக்கு இல்லை. தேசிய அளவில் பொருளாதார மந்த நிலை இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உற்பத்தித்துறையில் எந்தப் பாதிப்பும் இல்லை' என்றார்.

மேலும், 'ஆட்டோமொபைல் துறையில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. ஜி.எஸ்.டி வரியால் ஆட்டோமொபைல் துறைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை' எனத் தெரிவித்தார்.

முன்னதாக கேள்வி எழுப்பிய ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சத்யா, ' 28 சதவிகித ஜி.எஸ்.டி வரியால் ஆட்டோ மொபைல் துறை மூடப்படும் நிலையில் உள்ளது. எனவே மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க...மை டியர் கும்பகர்ணாஸ் உங்களுக்குத்தான்... இந்த நாள் எந்திரிங்கோ...!

ABOUT THE AUTHOR

...view details