தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையிலும், கரோனா தொற்றின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, சென்னையில் கரோனா தொற்று குறைந்துவரும் நிலையில் மற்ற மாவட்டங்களில் தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது.
சென்னையில் மொத்தம் 87 ஆயிரத்து 235 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதில் 70 ஆயிரத்து 651 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 15 ஆயிரத்து 127 நபர்கள் தீவர சிகிச்சையில் உள்ளனர். 15 மண்டலங்களிலும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 2, 000க்கும் கீழ் உள்ளது. நேற்று (ஜூலை 20) வரை கோடம்பாக்கத்தில் மட்டும் 2,000க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைப் பெற்றுவந்தனர். இன்று (ஜூலை 21) தொற்றின் எண்ணிக்கை கோடம்பாக்கத்திலும் குறைந்து தற்போது 1,977 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். தொற்றினால் இதுவரை 1,456 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான பட்டியல் :
மண்டலம் | தொற்று |