சென்னை:வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உலக கால்நடை தினம் கொண்டாடப்பட்டது. இதில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு விளையாட்டுத்துறை ஆணைய செயலர் ஆனந்த்குமார், கூடுதல் அரசு தலைமை செயலாளர் ஜவஹர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், " 70 விழுக்காடு நோய்கள் விலங்குகள் மூலம் மனிதருக்கு பரவுகிறது. ஆகவே விலங்குகளிடம் இருந்து நோய்கள் மனிதர்களுக்கு பரவாமல் இருக்க கால்நடை மருத்துவர்கள் தடுப்பு மருந்தைகளை கண்டறிந்து வழங்க வேண்டும்.
சென்னை ஐஐடியில் கரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. குறிப்பாக 7,300 பேரை பரிசோதனை செய்ததில் 196 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஐஐடியிலிருந்து வெளியில் பரவலாமலிருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.