தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கரோனாவால் 38 பேர் உயிரிழப்பு! - chennai district news
இன்று ஒரேநாளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 38 நபர்கள் உயிரிழந்ததன் மூலம், தமிழ்நாட்டில் இறப்பு எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 1,974 பேருக்கு கரோனா உறுதி!
By
Published : Jun 14, 2020, 8:18 PM IST
|
Updated : Jun 15, 2020, 12:49 AM IST
தமிழ்நாட்டில் புதிதாக இன்று (ஜூன் 14) 1,974 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையில் மட்டும் 1,415 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.
இதற்கிடையே, மார்ச் ஏழாம் தேதி முதல்முதலில் தமிழ்நாட்டில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. அன்றிலிருந்து மே 31ஆம் தேதிவரை (அதாவது 84 நாள்களில்) ஏறத்தாழ 22,333 பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டது. ஆனால், மே 31லிருந்து ஜூன் 14ஆம் தேதிவரைக்குள் 44,661 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதல் 84 நாள்களில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,000ஆக இருந்த நிலையில், தற்போது 14 நாள்களில் அதன் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதெபோல், மே 31வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173ஆக இருந்த சூழலில், தற்போது அதன் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையின் முதல்வர் ஜெயந்தி கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதேபோல் ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலி ஒருவர் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் 79 ஆய்வகங்களில் 18 ஆயிரத்து 782 நபர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் இருந்த 1,941 நபர்களுக்கும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்த 33 நபர்களுக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 44 ஆயிரத்து 661 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 ஆயிரத்து 676 நபர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 1,138 நபர்கள் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரையில், 24 ஆயிரத்து 547 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி 38 பேர் இன்று இறந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டின் இறப்பு எண்ணிக்கை 435ஆக உயர்ந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு
சென்னை
31,896 பேர்
செங்கல்பட்டு
2,882 பேர்
திருவள்ளூர்
1,865 பேர்
காஞ்சிபுரம்
709 பேர்
திருவண்ணாமலை
671 பேர்
கடலூர்
533 பேர்
திருநெல்வேலி
464 பேர்
விழுப்புரம்
437 பேர்
மதுரை
426 பேர்
தூத்துக்குடி
398 பேர்
அரியலூர்
392 பேர்
கள்ளக்குறிச்சி
344 பேர்
சேலம்
229 பேர்
திண்டுக்கல்
218 பேர்
ராணிப்பேட்டை
197 பேர்
கோயம்புத்தூர்
176 பேர்
விருதுநகர்
170 பேர்
திருச்சிராப்பள்ளி
163 பேர்
ராமநாதபுரம்
158 பேர்
தஞ்சாவூர்
155 பேர்
வேலூர்
152 பேர்
தேனி
146 பேர்
பெரம்பலூர்
146 பேர்
தென்காசி
134 பேர்
கன்னியாகுமரி
122 பேர்
திருப்பூர்
116பேர்
நாகப்பட்டினம்
113 பேர்
திருவாரூர்
128 பேர்
நாமக்கல்
92 பேர்
கரூர்
94 பேர்
சிவகங்கை
90 பேர்
ஈரோடு
73 பேர்
புதுக்கோட்டை
51 பேர்
திருப்பத்தூர்
47 பேர்
கிருஷ்ணகிரி
39 பேர்
தருமபுரி
27 பேர்
நீலகிரி மாவட்டம்
14 பேர்
மேலும், சர்வதேச விமானத்தில் வந்தவர்களில் 200 பேருக்கும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 85 பேருக்கும், ரயில் மூலம் வந்தவர்கள் 309 பேருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.