இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (டிச. 22) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் கூறியிருப்பதாவது:
இங்கிலாந்திலிருந்து புதிய கரோனா பாதிப்பு
இங்கிலாந்திலிருந்து தமிழ்நாட்டுக்கு 21ஆம் தேதி வந்த 23 பயணிகளில் ஒரு பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு இங்கிலாந்தில் புதியதாக உருவான கரோனா வைரஸ் தாக்குதல் இருக்கிறதா என்பது குறித்து புணே நகரிலுள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பரிசோதனை மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இங்கிலாந்து மற்றும் பிற வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாக 64 ஆயிரத்து 977 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்து 46 நபர்கள், இங்கிலாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த பயணி ஒருவர், பிகார், ராஜஸ்தான் ஆந்திரப்பிரதேசம், கேரளா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த தலா ஒரு பயணி என ஆயிரத்து 52 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உயரும் குணமடைந்தோரின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 32 லட்சத்து 88 ஆயிரத்து 290 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 8 லட்சத்து 9 ஆயிரத்து 14 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 391 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்த ஆயிரத்து 139 பேர் வீட்டுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 87 ஆயிரத்து 611 என உயர்ந்துள்ளது.
12 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 7, அரசு மருத்துமனையில் 10 நோயாளிகள் என 17 பேர் கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 12 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு நிலவரம்:
சென்னை - 2,22,888
கோயம்புத்தூர் - 51,483
செங்கல்பட்டு - 49,408
திருவள்ளூர் - 42,256
சேலம் - 31,186
காஞ்சிபுரம் - 28,449
கடலூர் - 24,540
மதுரை - 20,348
வேலூர் - 20,042
திருவண்ணாமலை - 19,047
தேனி - 16,812
தஞ்சாவூர் - 16,932
திருப்பூர் - 16,688
விருதுநகர் - 16,234
கன்னியாகுமரி - 16,187
தூத்துக்குடி - 15,977
ராணிப்பேட்டை - 15,836
திருநெல்வேலி - 15,182
விழுப்புரம் - 14,892
திருச்சிராப்பள்ளி - 13,956
ஈரோடு - 13,386
புதுக்கோட்டை - 11,348
நாமக்கல் - 11,015
திருவாரூர் - 10,804
கள்ளக்குறிச்சி - 10,777
திண்டுக்கல் - 10,760
தென்காசி - 8,211
நாகப்பட்டினம் - 8,007
நீலகிரி - 7,813
கிருஷ்ணகிரி - 7,754
திருப்பத்தூர் - 7,386
சிவகங்கை - 6,467
ராமநாதபுரம் - 6,289
தருமபுரி - 6,320
கரூர் - 5,077
அரியலூர் - 4,622
பெரம்பலூர் - 2,254
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 929
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1024
ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: மக்கள் நல்வாழ்வுத்துறையில் பதவி உயர்வுக்கு பணம் - ஆடியோ வெளியானதால் பரபரப்பு!