சென்னை: ஐ.ஐ.டி.யில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களால் கடந்த மாதம் கரோனா பரவத்தொடங்கியது. இதையடுத்து ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள விடுதிகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவில் 198 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ’அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலருக்கு கரோனா அறிகுறிகள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த 26 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டோம். அதில் 3 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.