தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பு! - சென்னையில் 199 பேருக்கு கரோனா தொற்று

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.

tamilnadu
tamilnadu

By

Published : Apr 12, 2020, 8:39 PM IST

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரு நாள் மட்டும் 106 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை கரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலை புள்ளி விவரங்களுடன் வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகளுக்கு விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 93 ஆயிரத்து 549 பேர் நேற்று வரை மக்கள் நல்வாழ்வுத்துறையின் தொடர் கண்காணிப்பில் வீட்டில் 28 நாள்கள் இருந்தனர். இவர்களில், 58 ஆயிரத்து 189 பேரின் 28 நாள்கள் தொடர் கண்காணிப்பு முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 93 ஆயிரத்து 560 பேர் 28 நாள்கள் வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 162 பயணிகள் விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளில் தனி வார்டில் ஆயிரத்து 890 பயணிகள் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 10 ஆயிரத்து 655 பேருக்கு ரத்தப்பரிசோதனை மாதிரிகள் பெறப்பட்டதில், ஆயிரத்து 75 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 373 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது .

ஆயிரத்து 207 நபர்களின் இரத்தம், சளி பரிசோதனை ஆய்வகங்களில் செய்யப்பட்டு வருகிறது. இன்று ஒரே நாளில் 106 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 969லிருந்து, ஆயிரத்து 75ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பலனின்றி 11 பேர் உயிரிழந்துள்ளனர். தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்காக 3 ஆயிரத்து 371 பேருக்கு வெண்டிலேட்டர்களும், 29 ஆயிரத்து 74 பேருக்கு படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகளும் தயார் நிலையில் உள்ளன.

இன்று நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனை முடிவுகளில் செங்கல்பட்டில் இரண்டு, சென்னையில் 18, கோயம்புத்தூரில் 22, கடலூரில் 4, திண்டுக்கலில் ஒருவர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு பேர், கரூரில் 3, ராணிப்பேட்டையில் 2, தென்காசி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர், திருப்பூரில் 35 பேர் என மொத்தம் 106 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா தொற்று உறுதியாகியுள்ள 34 மாவட்டங்களின் நிலவரம்

வரிசை எண் மாவட்டம் பாதிப்பு
1 சென்னை 199
2 கோயம்புத்தூர் 119
3 ஈரோடு 64
4 திருப்பூர் 60
5 திருநெல்வேலி 56
6 திண்டுக்கல் 56
7 நாமக்கல் 45
8 செங்கல்பட்டு 43
9 திருச்சிராப்பள்ளி 43
10 தேனி 29
11 ராணிப்பேட்டை 39
12 திருவள்ளூர் 29
13 மதுரை 25
14 கரூர் 25
15 தூத்துக்குடி 24
16 நாகப்பட்டினம் 24
17 கடலூர் 19
18 சேலம் 17
19 விழுப்புரம் 23
20 திருப்பத்தூர் 16
21 கன்னியாகுமரி 17
22 திருவாரூர் 13
23 வேலூர் 12
24 விருதுநகர் 11
25 தஞ்சாவூர் 11
26 திருவண்ணாமலை 11
27 நீலகிரி 09
28 காஞ்சிபுரம் 08
29 சிவகங்கை 06
30 தென்காசி 05
31 கள்ளக்குறிச்சி 03
32 ராமநாதபுரம் 02
33 அரியலூர் 01
34 பெரம்பலூர் 01

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details