ஈகைத் திருநாளாம் ரமலான் பண்டிகையை நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடினர். சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் பரப்பும் உன்னத திருவிழா "ஈத் உல் பித்ர்" எனப்படும் ஈகைத் திருநாள். ரமலான் நோன்பின் நிறைவாக, ஷவ்வால் முதல்பிறை தினத்தன்று உலகம் முழுவதும் இத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
கடந்த ஒருமாத காலமாக நோன்பு வைத்திருந்த இஸ்லாமிய பெருமக்கள், நேற்றுடன் (மே 24) முடித்துக் கொண்டனர். பிறை தென்பட்டதும் ரமலான் கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
கரோனா ஊரடங்கு - பள்ளிவாசல்களில் நடைபெறாத ரமலான் சிறப்பு தொழுகை - chennai corona curfew
சென்னை: ஊரடங்கு காரணமாக பள்ளி வாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெறவில்லை.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் ரமலான் சிறப்பு தொழுகைகள் நடைபெறாத நிலையில், வீடுகளிலேயே தொழுகையை மேற்கொண்டனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பெரிய மசூதிக்கு வரும் நபர்களை தடுத்து நிறுத்தி பாதுகாப்பு பணியில் காவல்துறை ஈடுபட்டிருந்தனர்.
ரமலான் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உற்சாகத்தை இழந்த ரமலான் - பள்ளிவாசல் முன்பு காவலர்கள் குவிப்பு