தமிழ்நாட்டில் மேலும் 4,965 பேருக்கு கரோனா உறுதி - கரோனா பாதிப்பு எண்ணிக்கை தமிழ்நாடு
18:06 July 21
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ஆயிரத்து 130 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 80ஆயிரத்து 643 ஆகவும், சென்னையில் 88 ஆயிரத்து 377ஆகவும் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் கரோனாவால் 75 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 2 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 4 ஆயிரத்து 894 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்துள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:கோடம்பாக்கத்தில் குறைந்துவரும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை!