தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 2079 பேருக்கு கரோனா பாதிப்பு - corona virus

தமிழ்நாட்டில் மேலும் 2079 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

corona
கரோனா

By

Published : Jul 18, 2021, 9:22 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத்துறை ஜூலை 18ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 42ஆயிரத்து 515 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இருந்த 2078 நபர்களுக்கும், ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 2079 நபர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தப் பாதிப்பு

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 46 லட்சத்து 95 ஆயிரத்து 38 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 25 லட்சத்து 35 ஆயிரத்து 402 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 27 ஆயிரத்து 897 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குணமடைந்தோரின் எண்ணிக்கை

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் 2743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 73 ஆயிரத்து 781ஆக உயர்ந்துள்ளது.

29 பேர் உயிரிழப்பு

மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் 10 பேரும், அரசு மருத்துவமனையில் 19 பேரும் என 29 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆயிரத்து 724ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சையில் எந்த மாவட்டம் அதிகம்

அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 2927 நபர்களும், ஈரோட்டில் 2720 நபர்களும், சேலத்தில் 1765 நபர்களும், திருப்பூரில் ஆயிரத்து 605 நபர்களும், சென்னையில் 1663 நபர்களும் , செங்கல்பட்டில் 1224 நபர்களும் என அதிகளவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு

  • சென்னை மாவட்டம் - 5,36,206
  • கோயம்புத்தூர் மாவட்டம் - 2,26,869
  • செங்கல்பட்டு மாவட்டம் - 1,60,488
  • திருவள்ளூர் மாவட்டம் - 1,12,562
  • சேலம் மாவட்டம் - 92,005
  • திருப்பூர் மாவட்டம் - 86,597
  • ஈரோடு மாவட்டம் - 91,944
  • மதுரை மாவட்டம் - 73,199
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 71,164
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 71,542
  • தஞ்சாவூர் மாவட்டம் - 66,613
  • கன்னியாகுமரி மாவட்டம் - 59,697
  • கடலூர் மாவட்டம் - 59,497
  • தூத்துக்குடி மாவட்டம் - 54,858
  • திருநெல்வேலி மாவட்டம் - 47,555
  • திருவண்ணாமலை மாவட்டம் - 51,279
  • வேலூர் மாவட்டம் - 47,648
  • விருதுநகர் மாவட்டம் - 45,273
  • தேனி மாவட்டம் - 42,769
  • விழுப்புரம் மாவட்டம் - 43,387
  • நாமக்கல் மாவட்டம் - 46,277
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 41,660
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 40,978
  • திருவாரூர் மாவட்டம் - 37,455
  • திண்டுக்கல் மாவட்டம் - 31,967
  • புதுக்கோட்டை மாவட்டம் - 27,770
  • திருப்பத்தூர் மாவட்டம் - 27,948
  • தென்காசி மாவட்டம் - 26,685
  • நீலகிரி மாவட்டம் - 29,864
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 28,494
  • தருமபுரி மாவட்டம் - 25,681
  • கரூர் மாவட்டம் - 22,465
  • மயிலாடுதுறை மாவட்டம் - 20,689
  • ராமநாதபுரம் மாவட்டம் - 19,900
  • நாகப்பட்டினம் மாவட்டம் -18,331
  • சிவகங்கை மாவட்டம் - 18,493
  • அரியலூர் மாவட்டம் - 15,517
  • பெரம்பலூர் மாவட்டம் - 11,375
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -1,007
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:3ஆம் அலை குறித்து பொய்யான தகவல்களைப் பரப்பாதீர்கள் - மா. சுப்பிரமணியன் வேண்டுகோள்

ABOUT THE AUTHOR

...view details