கரோனா தடுப்பு பணிகளுக்கான சிறப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.
அப்போது பேசிய டாக்டர். ராதாகிருஷ்ணன், "கிருமி நாசினி தெளிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்படுகிறது. பொதுமக்கள் முகக்கவசம் கிடைக்கவில்லை என்றால், சாதாரண துணியை இரண்டாக மடித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என தொடர்ந்து அறிவுறுத்துவருகிறோம்.
அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதிக சோதனைகள் செய்யப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் மக்கள் அச்சப்படத் தேவை இல்லை.
சளி, காய்ச்சல் உள்ளவர்கள் தாமாக முன் வந்து பரிசோதனை செய்யவேண்டும். தன்னார்வலர்கள் 10 நாள்களுக்கு ஒரு முறை தங்களை வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவேண்டும். தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாது என்று யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம்.