தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் குறைந்த கரோனா பாதிப்பு... கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 24ஆக குறைப்பு! - சென்னை கொரோனா பாதிப்பு

சென்னை: கடந்த சில நாள்களாக சென்னையில் கரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 24ஆக குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

chenq
cehna

By

Published : Aug 12, 2020, 2:03 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐந்து ஆயிரத்தை தாண்டுகிறது. ஆனால், சென்னையில் தற்போது கரோனா தொற்றின் வீரியம் குறைந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவித்து வருகிறோம்.

அவை படிப்படியாக குறைந்து தற்போது 6ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 7ஆவது மண்டலத்தில் எட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 8ஆவது மண்டலத்தில் எட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும், 9ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 10ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 11ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 14ஆவது மண்டலத்தில் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியும், 15ஆவது மண்டலத்தில் மூன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் உள்ளன.

அதாவது தற்போது மொத்தம் 24 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே உள்ளது" எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details