உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்று பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை எளிதில் தாக்கி அவர்களை உயிரிழக்க செய்கிறது. இதனால், காவல் துறையில் 50 வயதிற்கு மேல் பணிபுரியும் காவலர்களை கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தக்கூடாது என காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு வயது 50-க்கு மேல் உள்ளதால் 144 தடை உத்தரவை மீறிச் சென்ற நபர்களின் பட்டியலை தயாரிக்கும் பணிகளில் காவல் நிலையத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.