அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி. அன்பழகன் உள்ளிட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் குணமடைந்துள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா - tamilnadu labor welfare minister
20:01 July 16
சென்னை: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
மேலும் அவர் ஜூலை 14ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதும் அவரது மகன், மருமகனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க:இரண்டாவது பரிசோதனையிலும் பிரேசில் அதிபருக்கு கரோனா உறுதி