சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் உள்ளது. அங்கு தேர்வுத்துறை இயக்குநர் அறையில் உதவி இயக்குநராக பணிபுரிந்து வந்த ஒருவருக்கு கரோனா அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது.
தேர்வுத்துறை அலுவலகத்தில் ஒருவருக்கு கரோனா - school examination tamil nadu
சென்னை: அரசுத் தேர்வுத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த உதவி இயக்குனருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
school examination department
அதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தற்போது தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுவருகிறது. அவருடன் பணிபுரிந்த அலுவலர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. விரைவில் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இதையும் படிங்க:+2 வேதியியல் தேர்வில் தவறான கேள்வி... கூடுதல் மதிப்பெண்