தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா: மூன்றாம் அலை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று (செப். 16) மேலும் ஆயிரத்து 693 நபர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று மேலும் 1,693 பேருக்கு கரோனா

By

Published : Sep 16, 2021, 8:56 PM IST

Updated : Sep 17, 2021, 4:14 PM IST

சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் புதிதாக ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 205 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஆயிரத்து 693 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 39 லட்சத்து 30 ஆயிரத்து 427 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் மாநிலம் முழுவதிலுமிருந்து 26 லட்சத்து 40 ஆயிரத்து 361 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் என 16 ஆயிரத்து 756 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த ஆயிரத்து 548 நபர்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 88 ஆயிரத்து 334 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 8 நோயாளிகள், அரசு மருத்துமனையில் 17 நோயாளிகள் என 25 நபர்கள் சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கரோனா பாதிப்பால் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 271 என உயர்ந்துள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் தற்போது கரோனா கனிசமாக உயர்ந்துவருகிறது. இந்த நிலையில் பள்ளிகளை திறப்பது மாணவர்களிடையே சற்று தயக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அத்துடன் ஒன்றிய அரசு அக்டோபர், நவம்பர் மாதங்களில் கரோனா தொற்றின் மூன்றாம் அலைக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,47,076

கோயம்புத்தூர் - 2,39,613

செங்கல்பட்டு - 1,67,192

திருவள்ளூர் - 1,16,853

சேலம் - 97,083

திருப்பூர் - 91,744

ஈரோடு - 1,00,332

மதுரை - 74,257

காஞ்சிபுரம் - 73,402

திருச்சிராப்பள்ளி - 75,202

தஞ்சாவூர் - 72,288

கன்னியாகுமரி - 61,392

கடலூர் - 62,900

தூத்துக்குடி - 55,654

திருநெல்வேலி - 48,624

திருவண்ணாமலை - 53,851

வேலூர் - 49,127

விருதுநகர் - 45,876

தேனி - 43,306

விழுப்புரம் - 45,161

நாமக்கல் - 49,796

ராணிப்பேட்டை - 42,814

கிருஷ்ணகிரி - 42,415

திருவாரூர் - 39,630

திண்டுக்கல் - 32,649

புதுக்கோட்டை - 29,435

திருப்பத்தூர் - 28,741

தென்காசி - 27,214

நீலகிரி - 32,252

கள்ளக்குறிச்சி - 30,583

தருமபுரி - 27,199

கரூர் - 23,354

மயிலாடுதுறை - 22,446

ராமநாதபுரம் - 20,268

நாகப்பட்டினம் - 20,084

சிவகங்கை - 19,631

அரியலூர் - 16,556

பெரம்பலூர் - 11,826

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:” ஸ்டாலின் அரசு நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்”

Last Updated : Sep 17, 2021, 4:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details