தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 551 பேருக்கு கரோனா! - மக்கள் நல்வாழ்வு துறை

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.

551 பேருக்கு கரோனா  Tamilnadu Corona Updates  Corona Updates  தமிழ்நாட்டில் மேலும் 551 பேருக்கு கரோனா!  Corona confirmed for 551 people in Tamil Nadu
Tamilnadu Corona Updates

By

Published : Jan 18, 2021, 9:58 PM IST

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "ஆர்.டி.பிசி.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேலும் தனியார் ஆய்வகம் ஒன்றிற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 252 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 50 ஆயிரத்து 248 பேருக்கு ஆர்.டி.பிசி. ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 548 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு பேருக்கும், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 551 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இதுவரை ஒரு கோடியே 49 லட்சத்து 71 ஆயிரத்து 136 பேருக்கு ஆர்.டி.பிசி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 லட்சத்து 31 ஆயிரத்து 323 பேர் வயிற்று சூட்டினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில், தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 725 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 758 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 13 ஆயிரத்து 326 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி ஐந்து பேரும், அரசு மருத்துவமனையில் 3 பேரும் என 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 272 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை -2 லட்சத்து 29 ஆயிரத்து 238 பேர்

கோயம்புத்தூர் - 53 ஆயிரத்து 691 பேர்

செங்கல்பட்டு -50 ஆயிரத்து 922 பேர்

திருவள்ளூர் -43 ஆயிரத்து 247 பேர்

சேலம் -32 ஆயிரத்து 186 பேர்

காஞ்சிபுரம் -29 ஆயிரத்து 82 பேர்

கடலூர் - 24 ஆயிரத்து 858 பேர்

மதுரை - 20 ஆயிரத்து 830 பேர்

வேலூர் - 20 ஆயிரத்து 579 பேர்

திருவண்ணாமலை - 19 ஆயிரத்து 303 பேர்

தேனி - 17 ஆயிரத்து 15 பேர்

தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 547 பேர்

திருப்பூர் - 17 ஆயிரத்து 564 பேர்

விருதுநகர் - 16 ஆயிரத்து 509 பேர்

கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 667 பேர்

தூத்துக்குடி - 16 ஆயிரத்து 210 பேர்

ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 45 பேர்

திருநெல்வேலி - 15 ஆயிரத்து 489 பேர்

விழுப்புரம் - 15 ஆயிரத்து 115 பேர்

திருச்சிராப்பள்ளி - 14 ஆயிரத்து 511 பேர்

ஈரோடு - 14 ஆயிரத்து 95 பேர்

புதுக்கோட்டை - 11 ஆயிரத்து 505 பேர்

கள்ளக்குறிச்சி - 10 ஆயிரத்து 861 பேர்

திருவாரூர் - 11 ஆயிரத்து 86 பேர்

நாமக்கல் - 11 ஆயிரத்து 477 பேர்

திண்டுக்கல் - 11 ஆயிரத்து 134 பேர்

தென்காசி - 8 ஆயிரத்து 352 பேர்

நாகப்பட்டினம் - 8 ஆயிரத்து 335 பேர்

நீலகிரி - 8 ஆயிரத்து 113 பேர்

கிருஷ்ணகிரி - 8 ஆயிரத்து 8 பேர்

திருப்பத்தூர் - 7 ஆயிரத்து 540 பேர்

சிவகங்கை - 6 ஆயிரத்து 614 பேர்

ராமநாதபுரம் - 6 ஆயிரத்து 391 பேர்

தருமபுரி - 6 ஆயிரத்து 539 பேர்

கரூர் -5 ஆயிரத்து 343 பேர்

அரியலூர் - 4 ஆயிரத்து 663 பேர்

பெரம்பலூர் - 2 ஆயிரத்து 260 பேர்

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940 பேர், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் ஆயிரத்து 31 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் புதிதாக 13,788 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று - 145 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details