தமிழ்நாட்டில் 469 பேருக்கு கரோனா உறுதி! - Taminadu Corona News
சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக 469 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
Corona confirmed for 469 people in Tamil Nadu
By
Published : Feb 9, 2021, 7:57 PM IST
மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக 51 ஆயிரத்து 10 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிலிருந்த 468 பேருக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என மொத்தம் 469 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரத்து 130 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 8 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 328 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 491 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 26 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் சிகிச்சைப் பலனின்றி அரசு மருத்துவமனையில் ஒருவரும், தனியார் மருத்துவமனையில் மூவரும் என 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 391 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
எண்
மாவட்டம்
பாதிப்பு
01
சென்னை
2,32,603
02
கோயம்புத்தூர்
54,905
03
செங்கல்பட்டு
51,875
04
திருவள்ளூர்
43,771
05
சேலம்
32,528
06
காஞ்சிபுரம்
29,342
07
கடலூர்
25,012
08
மதுரை
21,093
09
வேலூர்
20,826
10
திருவண்ணாமலை
19,402
11
தேனி
17,111
12
தஞ்சாவூர்
17,830
13
திருப்பூர்
18,058
14
விருதுநகர்
16,602
15
கன்னியாகுமரி
16,924
16
தூத்துக்குடி
16,296
17
ராணிப்பேட்டை
16,153
18
திருநெல்வேலி
15,637
19
விழுப்புரம்
15,215
20
திருச்சி
14,797
21
ஈரோடு
14,551
22
புதுக்கோட்டை
11,588
23
கள்ளக்குறிச்சி
10,891
24
திருவாரூர்
11,244
25
நாமக்கல்
11,709
26
திண்டுக்கல்
11,315
27
தென்காசி
8,455
28
நாகப்பட்டினம்
8,502
29
நீலகிரி
8,255
30
கிருஷ்ணகிரி
7,099
31
திருப்பத்தூர்
7,602
32
சிவகங்கை
6,679
33
ராமநாதபுரம்
6,426
34
தருமபுரி
6,610
35
கரூர்
5,434
36
அரியலூர்
4,709
37
பெரம்பலூர்
2,271
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 943 பேர், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1039 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 489 பேருக்கு கரோனா பாதிப்பு!