தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,542 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 1,542 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

By

Published : Aug 27, 2021, 8:00 PM IST

தமிழ்நாட்டில் இன்று 1,542 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,542 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: சுகாதாரத்துறை இன்று (ஆக.27) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 889 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த ஆயிரத்து 541 நபர்களுக்கும், மலேசியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஒருவருக்கும் என 1,542 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே எட்டு லட்சத்து 383 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் இருந்த 26 லட்சத்து எட்டாயிரத்து 748 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 17 ஆயிரத்து 797 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த 1,793 நபர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 56 ஆயிரத்து 116 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் ஒரு நோயாளியும் அரசு மருத்துமனையில் 20 நோயாளிகளும் என 21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். ஆகவே, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 835 என உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் புதிதாக 231 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் ஈரோட்டில் 122 நபர்களுக்கும், சென்னையில் 162 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 126 நபர்களுக்கும் என அதிக அளவில் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,43,408

கோயம்புத்தூர் - 2,35,408

செங்கல்பட்டு - 1,64,976

திருவள்ளூர் - 1,15,548

சேலம் - 95,905

திருப்பூர் - 90,021

ஈரோடு - 97,915

மதுரை - 73,946

காஞ்சிபுரம் - 72,692

திருச்சிராப்பள்ளி - 74,108

தஞ்சாவூர் - 70,532

கன்னியாகுமரி - 60,886

கடலூர் - 62,142

தூத்துக்குடி- 55,452

திருநெல்வேலி - 48,397

திருவண்ணாமலை - 53,218

வேலூர் - 48,789

விருதுநகர் - 45,734

தேனி - 43,184

விழுப்புரம் - 44,710

நாமக்கல் - 48,626

ராணிப்பேட்டை - 42,498

கிருஷ்ணகிரி - 42,017

திருவாரூர் - 38,891

திண்டுக்கல் - 32,463

புதுக்கோட்டை - 29,006

திருப்பத்தூர் - 28,559

தென்காசி - 27,039

நீலகிரி - 31,650

கள்ளக்குறிச்சி - 30,010

தருமபுரி - 26,755

கரூர் - 23,063

மயிலாடுதுறை - 21,773

ராமநாதபுரம் - 20,175

நாகப்பட்டினம் - 19,566

சிவகங்கை - 19,325

அரியலூர் - 16,288

பெரம்பலூர் - 11,677

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,021

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் 2,19,545 பேர் பயன் - சுகாதாரத்துறை

ABOUT THE AUTHOR

...view details