சென்னையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதிலும் கரோனாவின் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இதுவரை, ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 720 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 891 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 12 ஆயிரத்து மூன்று பேர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இரண்டாயிரத்து 826 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மண்டல வாரியான நிலைப் பட்டியலை மாநகராட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,
கோடம்பாக்கம் - 15878 பேர்
அண்ணா நகர் - 15,846 பேர்
ராயபுரம் - 13804 பேர்
தேனாம்பேட்டை - 13523 பேர்
தண்டையார்பேட்டை - 11864 பேர்
திரு.வி.க. நகர் - 10674 பேர்