தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா மையங்களாக வழங்கிய சத்குரு - கரோனா வைரஸ்

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா மருத்துவ மையங்களாக தமிழ்நாடு அரசுக்கு அளிக்க உள்ளதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

ஈஷா அறக்கட்டளை
ஈஷா அறக்கட்டளை

By

Published : Apr 27, 2021, 7:21 PM IST

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா வித்யா பள்ளி வளாகங்களை, 990 படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசுக்கு கொடுக்கிறோம்.

இந்தச் சவாலிலிருந்து வெளிவர நம் சமூகம் ஒன்றிணைந்து நிர்வாகத்தின் கரங்களைப் பலப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி, கோவை, ஈரோடு, சேலம், நாகர்கோவில், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ஈஷா வித்யா பள்ளிகளை கரோனா சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதேபோல், கடந்தாண்டு கரோனா நிவாரணப் பணிகளுக்காக சத்குரு தனது பங்களிப்பாக மட்டும் ரூபாய்.11.54 கோடியை வழங்கினார்.

இந்த நிதி அவரது ஓவியங்களை ஆன்லைனில் விற்பனை செய்த தனது மூலம் திரட்டப்பட்டது. மேலும், ஈஷா தன்னார்வ தொண்டர்கள் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு, கசாயம் வழங்கி அவர்களின் பசியைப் போக்கிவருகின்றனர்.

மருத்துவப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முகக்கவசம், சானிடைசர், பிபிஇ கிட் போன்ற உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details