சென்னை பெருநகர மாநகராட்சியில் கரோனா தொற்று உறுதியானவர்கள் வீடுகள் உள்ள பகுதியிலிருந்து 8 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களிடம் காய்ச்சல், இருமல், சளி, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை குறைபாடு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஊழியர்களைக் கொண்டு கணக்கெடுத்துவருகின்றனர் .
அதனடிப்படையில் இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு நோய்த்தொற்று ஏதாவது ஏற்பட்டால் உடனடியாகச் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்மூலம் கரோனா தொற்று வேறு யாருக்கும் இல்லை என்பதை உறுதிசெய்யவும் மக்கள் நல்வாழ்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
மேலும் சென்னை மாவட்டத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 ஆயிரத்து 240 பேர்களில் 19 ஆயிரத்து120 வீடுகள் தொடர் கண்காணிப்பில் உள்ளன. இவர்களில் ஆயிரத்து 120 நபர்கள் வெளிநாட்டிலிருந்து வந்து 28 நாள்கள் முடிந்துள்ளதால் கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
இதையும் படிங்க:800 குடும்பங்களுக்கு தோள்கொடுத்த தொழிலதிபர்... செயல் பேசும் மனிதநேயம்!