தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,512 பேருக்குக் கரோனா உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,512 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

By

Published : Aug 31, 2021, 10:31 PM IST

தமிழ்நாட்டில் இன்று 1,512 பேருக்கு கரோனா உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,512 பேருக்கு கரோனா உறுதி

சென்னை:சுகாதாரத்துறை இன்று (ஆக.31) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், "தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 437 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்து, ஆயிரத்து 512 நபர்களுக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 14 லட்சத்து 25 ஆயிரத்து 219 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 26 லட்சத்து 14 ஆயிரத்து 872 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 850 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில், மேலும் குணமடைந்த ஆயிரத்து 725 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 63 ஆயிரத்து 101 என உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் 16 நோயாளிகளும் என 22 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 34ஆயிரத்து 921 என உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் விகிதம் நேற்று 0.9 விழுக்காடு என இருந்த நிலையில் இன்று 1.0 விழுக்காடு என அதிகரித்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்தப் பாதிப்பு விவரம்:

சென்னை - 5,44,153;

கோயம்புத்தூர் - 2,36,077;

செங்கல்பட்டு - 1,65,387;

திருவள்ளூர் - 1,15,814;

சேலம் - 96,129;

திருப்பூர் - 90,305;

ஈரோடு - 98,416;

மதுரை - 74,003;

காஞ்சிபுரம் - 72,830;

திருச்சிராப்பள்ளி - 74,354;

தஞ்சாவூர் - 70,864;

கன்னியாகுமரி - 60,992;

கடலூர் - 62,290;

தூத்துக்குடி - 55,492;

திருநெல்வேலி - 48,449;

திருவண்ணாமலை - 53,356;

வேலூர் - 48,855;

விருதுநகர் - 45,752;

தேனி - 43,205;

விழுப்புரம் - 44,823;

நாமக்கல் - 48,840;

ராணிப்பேட்டை - 42,560;

கிருஷ்ணகிரி - 42,085;

திருவாரூர் - 39,028;

திண்டுக்கல் - 32,479;

புதுக்கோட்டை - 29,108;

திருப்பத்தூர் - 28,599;

தென்காசி - 27,094;

நீலகிரி - 31,758;

கள்ளக்குறிச்சி - 30,101;

தருமபுரி - 26,848;

கரூர் - 23,112;

மயிலாடுதுறை - 21,895;

ராமநாதபுரம் - 20,188;

நாகப்பட்டினம் - 19,668;

சிவகங்கை - 19,379;

அரியலூர் - 16,364;

பெரம்பலூர் - 11,707;

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,021;

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,082;

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க:அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி வகுப்புகள் நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்

ABOUT THE AUTHOR

...view details