இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரத்து 55 பேருக்கு கரோனா பரிசோதனை செய்ததில், 4 ஆயிரத்து 965 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் 4 ஆயிரத்து 887 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 78 பேர் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாடு திரும்பிய நபர்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை 19 லட்சத்து 56 ஆயிரத்து 672 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மீதமுள்ள 51 ஆயிரத்து 344 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, இன்று 4 ஆயிரத்து 894 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் இன்று மட்டும் கரோனாவால் 75 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 2 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பு விவரம்:
- சென்னை மாவட்டம் - 88,377
- செங்கல்பட்டு மாவட்டம் - 10,289
- திருவள்ளூர் மாவட்டம் - 9,774
- மதுரை மாவட்டம் - 8,517
- காஞ்சிபுரம் மாவட்டம் - 5,362
- வேலூர் மாவட்டம் - 4,226
- திருவண்ணாமலை மாவட்டம் - 4,233
- தூத்துக்குடி மாவட்டம் - 3,914
- விருதுநகர் மாவட்டம் - 3,924
- தேனி மாவட்டம் - 2,732
- ராமநாதபுரம் மாவட்டம் - 2,603
- கன்னியாகுமரி மாவட்டம் - 2,568
- கள்ளக்குறிச்சி மாவட்டம் - 2,435
- சேலம் மாவட்டம் - 2,459
- திருநெல்வேலி மாவட்டம் - 2,851
- திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 2,470
- விழுப்புரம் மாவட்டம் - 2,396
- ராணிப்பேட்டை மாவட்டம் - 2,370
- கோயம்புத்தூர் மாவட்டம் - 2,359
- கடலூர் மாவட்டம் - 1,921
- திண்டுக்கல் மாவட்டம் - 1,725
- சிவகங்கை மாவட்டம் - 1,687
- தஞ்சாவூர் மாவட்டம் - 1,316
- தென்காசி மாவட்டம் - 1,259
- புதுக்கோட்டை மாவட்டம் - 1,127
- திருவாரூர் மாவட்டம் - 1,014
- அரியலூர் மாவட்டம் - 6,84
- திருப்பத்தூர் மாவட்டம் - 599
- ஈரோடு மாவட்டம் - 512
- திருப்பூர் மாவட்டம் - 541
- நாகப்பட்டினம் மாவட்டம் - 466
- நீலகிரி மாவட்டம் - 516
- தருமபுரி மாவட்டம் - 488
- கிருஷ்ணகிரி மாவட்டம் - 451
- நாமக்கல் மாவட்டம் - 353
- கரூர் மாவட்டம் - 293
- பெரம்பலூர் மாவட்டம் - 233
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு வந்த பயணிகளின் விவரம்:
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 717 பேர்
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 458 பேர்
ரயில் மூலம் வந்தவர்கள்: 424 பேர்
இதையும் படிங்க:கரோனா தடுப்பு நடவடிக்கை: டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறைப்பு!