தமிழ்நாட்டில் கரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாகப் பரவிவருகிறது. புதிதாக 15,830 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (ஏப். 27) ஒரேநாளில் மட்டும் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இரண்டு கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது எனத் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து எட்டாயிரத்து 855 பேர் கரோனாவிற்குச் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் கரோனா பராமரிப்பு விதிமுறைகளைத் தீவிரப்படுத்தும் நோக்கில், சென்னையில் உள்ள அனைத்து தனியார் உணவகங்கள், மருத்துவமனைகளில் தேவையான வசதிகளுடன் கரோனா பராமரிப்பு மையங்களைத் தனிப்பட்ட முறையில் தொடங்க அனுமதி தேவையில்லை, மாநகராட்சிக்கு ஒரு தகவல் தெரிவித்தால் போதும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:1.50 கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய அரசு ஆணை!