கரோனா குறித்து தமிழ்நாட்டில் காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் பலர் பல்வேறு விதமாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் ஏ. கே. விஸ்வநாதன் அறிவுறுத்தலின்படி பரங்கிமலை காவல் மாவட்ட துணை ஆணையர் பிரபாகரன் தலைமையில் தாம்பரம் உதவி ஆணையர் அசோகன் ஆகியோர் கரோனா குறித்த விழிப்புணர்வு பாடலை வெளியிட்டனர்.
கரோனா விழிப்புணர்வு பாடல் இந்த விழிப்புணர்வு பாடலில் சென்னை பரங்கிமலை காவல் மாவட்ட காவல்துறையினர் கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், காவல்துறையினர் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றும்படியும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலை நாட்டுப்புறப் பாடகரும் திரைப்படப் பின்னணிப் பாடகருமான வேல்முருகன் பாடியுள்ளார். உடன் பரங்கிமலை துணை ஆணையர் பிரபாகரன், தாம்பரம் உதவி ஆணையர் ஆகியோரும் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... கோவையில் கரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி