தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊரு விட்டு ஊரு வந்து' ஸ்டைலில் ஒரு கரோனா விழிப்புணர்வுப் பாடல் - corona awareness song

கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற 'ஊரு விட்டு ஊரு வந்து' பாடலை விழிப்புணர்வு வரிகளாக மாற்றி, வெளியான பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

‘ஊரு விட்டு ஊரு வந்து’  கரகாட்டக்கார கரோனா பாடல்
‘ஊரு விட்டு ஊரு வந்து’ கரகாட்டக்கார கரோனா பாடல்

By

Published : Apr 23, 2020, 4:31 PM IST

'கரகாட்டக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'ஊரு விட்டு, ஊரு வந்து... காதல் கீதல் பண்ணாதீங்க' என்ற பாடல் அப்போது பிரபலமாக மக்களிடம் பாடப்பட்டது. அதே பாடலை அடிப்படையாகக் கொண்டு, 'வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்... கரோனா வந்திடும் தம்பி' என விழிப்புணர்வு வரிகளாக மாற்றப்பட்டு, புதிய பாடல் ஒன்று உருவாகியுள்ளது.

'ஊரு விட்டு ஊரு வந்து' கரகாட்டக்காரப்புகழ் ஸ்டைலில் கரோனா பாடல்

இந்த கரோனா விழிப்புணர்வு பாடலை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தித் தொடர்பாளருமான தியாகராஜன் எழுதி, வெளியிட்டுள்ளார்.

அதில் 'வீட்டை விட்டு வெளியே வந்து, ஊரை நீங்க சுற்றாதீங்க,

கரோனா வந்து தொலைஞ்சதுன்னா... நம்ம பொழப்பு வீணாகுங்க,

இருந்திடு தம்பி... வீட்டிலிருந்து தம்பி எத்தனை பேரு வாழ்க்கை உங்களை நம்பி..'

இவ்வாறு பாடலை இயற்றியுள்ளார்.

இதையும் படிங்க: கோவிட் 19: உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் நிலை...

ABOUT THE AUTHOR

...view details