தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்று 921 பேருக்கு கரோனா: தமிழ்நாட்டில் குறைந்துவரும் தொற்று!

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 921 என்ற அளவில் குறைந்துள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

corona
corona

By

Published : Jan 1, 2021, 7:55 PM IST

மக்கள் நல்வாழ்வுத் துறை ஜனவரி 1ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளிவிவர தகவலில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 66,808 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்த 920 நபர்களுக்கும், தமிழ்நாட்டிற்கு கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 921 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 943 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் எட்டு லட்சத்து 18 ஆயிரத்து 935 நபர்கள் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் எட்டாயிரத்து 380 நபர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர்களில் குணமடைந்த ஆயிரத்து 29 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்து உடல்நிலை எண்ணிக்கை ஏழு லட்சத்து 98 ஆயிரத்து 420 என உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நபர்களில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் எட்டு நோயாளிகளும் என 13 பேர் மேலும் இறந்துள்ளனர்.

இதனால் வைரஸ் நோய்த் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 135 என உயர்ந்துள்ளது. இங்கிலாந்திலிருந்து தமிழ்நாடு வந்த 1,981 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர்களில் 24 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,945 நபர்களுக்கு வைரஸ் நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. மற்றவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இங்கிலாந்திலிருந்து வந்த அவர்களுடன் தொடர்புடைய 20 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனியாக வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகின்றனர்.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

  • சென்னை - 2,25,758
  • கோயம்புத்தூர் - 52,418
  • செங்கல்பட்டு - 50,090
  • திருவள்ளூர் - 42,682
  • சேலம் 31,626
  • காஞ்சிபுரம் - 28,732
  • கடலூர் - 24,695
  • மதுரை - 20,548
  • வேலூர் - 20243
  • திருவண்ணாமலை - 19,160
  • தேனி - 16,902
  • தஞ்சாவூர் - 17,201
  • திருப்பூர் - 17,102
  • விருதுநகர் - 16,358
  • கன்னியாகுமரி - 16,365
  • தூத்துக்குடி - 16,084
  • ராணிப்பேட்டை - 15,919
  • திருநெல்வேலி - 15,303
  • விழுப்புரம் - 15,012
  • திருச்சி - 14,203
  • ஈரோடு - 13,721
  • புதுக்கோட்டை - 11,412
  • கள்ளக்குறிச்சி - 10,802
  • திருவாரூர் - 10,942
  • நாமக்கல் - 11,228
  • திண்டுக்கல் - 10,961
  • தென்காசி - 8,272
  • நாகப்பட்டினம் - 8,164
  • நீலகிரி - 7,956
  • கிருஷ்ணகிரி - 7,885
  • திருப்பத்தூர் - 7,450
  • சிவகங்கை - 6,539
  • ராமநாதபுரம் - 6,324
  • தருமபுரி - 6,423
  • கரூர் - 5,177
  • அரியலூர் - 4,637
  • பெரம்பலூர் - 2,257
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 930
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1026
  • ரயில் மூலம் வந்தவர்கள் - 428

ABOUT THE AUTHOR

...view details