சென்னை: சுகாதாரத்துறை இன்று (நவ.24) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 363 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் இருந்த 744 நபர்கள் மேலும் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 193 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது மருத்துவமனையில் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,484 சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 782 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 9 நோயாளிகளும் என 14 நோயாளிகள் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 415 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 115 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 117 நபர்களுக்கும் என கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது" என் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 5,57,437
கோயம்புத்தூர் - 2,49,514
செங்கல்பட்டு - 1,73,418
திருவள்ளூர் - 1,20,047
ஈரோடு - 1,05,921
சேலம் - 1,01,039
திருப்பூர் - 96,806
திருச்சிராப்பள்ளி - 78,332
மதுரை - 75,471
காஞ்சிபுரம் - 75,476
தஞ்சாவூர் - 76,001
கடலூர் - 64,361
கன்னியாகுமரி - 62,725
தூத்துக்குடி - 56,472
திருவண்ணாமலை - 55,154
நாமக்கல் - 53,219
வேலூர் - 50,122
திருநெல்வேலி - 49,608
விருதுநகர் - 46,386