சென்னை:பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலின்படி, “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 16 ஆயிரத்து 670 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 72 நபர்கள் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 49 லட்சத்து 12 ஆயிரத்து 364 நபர்களுக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 34 லட்சத்து 53 ஆயிரத்து 679 பேர் கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. இவர்களில் தற்போது மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 404 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 30 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 250 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 52 நபர்களுக்கும் செங்கல்பட்டில் ஒன்பது நபர்களுக்கும் கோயம்புத்தூர் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா இரண்டு நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 3 நபருக்கும் வேலூர், ராமநாதபுரம், சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபருக்கும் என 72 நபர்களுக்கு புதியதாக கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் 2,495 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 37 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பரிசோதனை செய்பவர்களில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னை மாவட்டத்தில் 225 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் புதியதாக 72 பேருக்கு கரோனா பாதிப்பு! - chennai corona affects
தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 72 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 52 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்பது நபர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதியதாக 72 பேருக்கு கரோனா பாதிப்பு!