மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் கோவில்பட்டியில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வதற்கு மேலும்ஒரு ஆய்வு மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசோதனை ஆய்வகங்கள் எண்ணிக்கை 253 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில், மேலும் புதிதாக 52 ஆயிரத்து 343 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 504 பேருக்கும், மேற்கு வங்காளத்தில் இருந்து வந்த நான்கு பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் என 509 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 2 ஆயிரத்து 171 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இதுவரை 8 லட்சத்து 37 ஆயிரத்து 327 பேர் கரோனா தொற்று பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் நான்காயிரத்து 601 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதில், பூரண குணமடைந்த 531 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 3 பேரும், அரசு மருத்துமனையில் 3 பேரும் என மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 345 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை -2 லட்சத்து 30 ஆயிரத்து 982 பேர்
கோயம்புத்தூர் - 54 ஆயிரத்து 282 பேர்
செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 457 பேர்
திருவள்ளூர் - 43 ஆயிரத்து 514 பேர்
சேலம் - 32 ஆயிரத்து 384 பேர்
காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 235 பேர்
கடலூர் - 24 ஆயிரத்து 920 பேர்
மதுரை - 20 ஆயிரத்து 975 பேர்
வேலூர் - 20 ஆயிரத்து 712 பேர்
திருவண்ணாமலை - 19 ஆயிரத்து 348 பேர்
தேனி - 17ஆயிரத்து 68 பேர்
தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 649 பேர்
திருப்பூர் - 17 ஆயிரத்து 850 பேர்
விருதுநகர் - 16 ஆயிரத்து 552 பேர்
கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 801 பேர்
தூத்துக்குடி - 16 ஆயிரத்து 272 பேர்
ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 110 பேர்
திருநெல்வேலி - 15 ஆயிரத்து 561 பேர்
விழுப்புரம் - 15 ஆயிரத்து 176 பேர்
திருச்சி - 14 ஆயிரத்து 655 பேர்
ஈரோடு - 14 ஆயிரத்து 325 பேர்
புதுக்கோட்டை - 11 ஆயிரத்து 548 பேர்
கள்ளக்குறிச்சி - 10 ஆயிரத்து 869 பேர்
திருவாரூர் - 11 ஆயிரத்து 179 பேர்
நாமக்கல் - 11 ஆயிரத்து 601 பேர்
திண்டுக்கல் - 11 ஆயிரத்து 233 பேர்
தென்காசி - எட்டாயிரத்து 414 பேர்
நாகப்பட்டினம் - எட்டாயிரத்து 437 பேர்
நீலகிரி - எட்டாயிரத்து 199 பேர்
கிருஷ்ணகிரி - எட்டாயிரத்து 64 பேர்
திருப்பத்தூர் - ஏழாயிரத்து 566 பேர்
சிவகங்கை - ஆறாயிரத்து 653 பேர்
ராமநாதபுரம் - ஆறாயிரத்து 411 பேர்
தருமபுரி - ஆறாயிரத்து 579 பேர்
கரூர் - ஐந்தாயிரத்து 391 பேர்
அரியலூர் - நான்காயிரத்து 685 பேர்
பெரம்பலூர் - இரண்டாயிரத்து 264 பேர்
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940 பேர் , உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் ஆயிரத்து 38 பேர், ரயில் மூலம் வந்தவர்கள் 428 பேர் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 503 பேருக்கு கரோனா!