மக்கள் நல்வாழ்வுத்துறை பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "காஞ்சிபுரத்தில் தனியார் பரிசோதனை மையம் ஒன்றுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 53 ஆயிரத்து 471 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழ்நாட்டில் இருந்த 512 பேருக்கும், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இரண்டு பேருக்கும் என 514 பேருக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை ஒரு கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 23 பேருக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், 8 லட்சத்து 39 ஆயிரத்து 866 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 494 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 533 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், குணமடைந்தவரின் எண்ணிக்கை 8 லட்சத்து 23 ஆயிரத்து ஒன்று ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 2 பேரும், அரசு மருத்துவமனையில் 2 பேரும் என மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 371 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 2 லட்சத்து 31 ஆயிரத்து 711 பேர்
கோயம்புத்தூர் - 54 ஆயிரத்து 575 பேர்
செங்கல்பட்டு - 51 ஆயிரத்து 641 பேர்
திருவள்ளூர் - 43 ஆயிரத்து 626 பேர்
சேலம் - 32 ஆயிரத்து 457 பேர்
காஞ்சிபுரம் - 29 ஆயிரத்து 288 பேர்
கடலூர் - 24 ஆயிரத்து 948 பேர்
மதுரை - 21 ஆயிரத்து 33 பேர்
வேலூர் - 20 ஆயிரத்து 769 பேர்
திருவண்ணாமலை - 19 ஆயிரத்து 369 பேர்
தேனி - 17 ஆயிரத்து 86 பேர்
தஞ்சாவூர் - 17 ஆயிரத்து 747 பேர்
திருப்பூர் - 17 ஆயிரத்து 965 பேர்
விருதுநகர் - 16 ஆயிரத்து 575 பேர்
கன்னியாகுமரி - 16 ஆயிரத்து 862 பேர்
தூத்துக்குடி - 16 ஆயிரத்து 283 பேர்
ராணிப்பேட்டை - 16 ஆயிரத்து 134 பேர்