தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 26,465 பேருக்கு கரோனா பாதிப்பு! - Corona affects 26,465 people in Tamil Nadu

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று 26 ஆயிரத்து 465 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 26,465 பேருக்கு கரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் 26,465 பேருக்கு கரோனா பாதிப்பு!

By

Published : May 8, 2021, 7:55 AM IST

மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று (மே. 7) வெளியிட்டுள்ள புள்ளி விபர தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 352 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 20 நபர்கள் உட்பட 26 ஆயிரத்து 465 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 32 லட்சத்து 69 ஆயிரத்து 987 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 13 லட்சத்து 23 ஆயிரத்து 965 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் மையங்களில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 355 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 ஆயிரத்து 381 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 லட்சத்து 73 ஆயிரத்து 439 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த 197 பேர் இறந்துள்ளனர்.


மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :

சென்னை - 3,77,042

செங்கல்பட்டு - 92,476

கோயம்புத்தூர் - 90,454

திருவள்ளூர் - 68,121

சேலம் - 45,709

காஞ்சிபுரம் - 42,519

கடலூர் - 32,662

மதுரை - 36,716

வேலூர் - 30,333

தஞ்சாவூர் - 27,890

திருவண்ணாமலை - 25,603

திருப்பூர் - 29,865

கன்னியாகுமரி - 24,547

திருச்சிராப்பள்ளி - 27,740

தூத்துக்குடி - 28,200

திருநெல்வேலி - 29,181

தேனி - 22,713

விருதுநகர் - 21,801

ராணிப்பேட்டை - 23,405

விழுப்புரம் - 21,703

ஈரோடு - 25,240

நாமக்கல் - 18,299

திருவாரூர் - 16,750

திண்டுக்கல் - 17,547

புதுக்கோட்டை - 14,751

கள்ளக்குறிச்சி - 13,547

நாகப்பட்டினம் - 15,556

தென்காசி - 13,340

நீலகிரி - 10,633

கிருஷ்ணகிரி - 17,434

திருப்பத்தூர் - 11,158

சிவகங்கை - 9,441

தருமபுரி - 10,943

ராமநாதபுரம் - 9,768

கரூர் - 9,219

அரியலூர் - 6,095

பெரம்பலூர் - 3,057

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,004

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,075

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்

ABOUT THE AUTHOR

...view details