தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 21,228 பேருக்கு கரோனா பாதிப்பு; 144 பேர் உயிரிழப்பு! - chennai latest news

சென்னை : தமிழ்நாட்டில் புதிதாக 21 ஆயிரத்து 228 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 144 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 21,228 பேருக்கு கரோனா பாதிப்பு; 144 பேர் உயிரிழப்பு!
தமிழ்நாட்டில் 21,228 பேருக்கு கரோனா பாதிப்பு; 144 பேர் உயிரிழப்பு!

By

Published : May 4, 2021, 9:44 PM IST

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே 4) வெளியிட்ட புள்ளிவிவர தகவலின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் ஆய்வகம் ஒன்றில் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 266ஆக அதிகரித்துள்ளது.

மேலும் புதிதாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 141 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 34 நபர்கள் உட்பட 21 ஆயிரத்து 228 நபர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2 கோடியே 28 லட்சத்து 30 ஆயிரத்து 992 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் 12 லட்சத்து 49 ஆயிரத்து 292 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தல் மையங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 19 ஆயிரத்து 112 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 9 ஆயிரத்து 450ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 144 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 612ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :

சென்னை - 3,58,573

செங்கல்பட்டு - 86,265

கோயம்புத்தூர் - 84,206

திருவள்ளூர் - 63,618

சேலம் - 43,800

காஞ்சிபுரம் - 40,163

கடலூர் - 31,525

மதுரை - 33,669

வேலூர் - 28,534

தஞ்சாவூர் - 27,059

திருவண்ணாமலை - 24,650

திருப்பூர் - 28,213

கன்னியாகுமரி - 23,125

திருச்சிராப்பள்ளி - 25,495

தூத்துக்குடி - 25,796

திருநெல்வேலி - 27,129

தேனி - 21,385

விருதுநகர் - 21,023

ராணிப்பேட்டை - 22,461

விழுப்புரம் - 20,239

ஈரோடு - 23,388

நாமக்கல் - 17,232

திருவாரூர் - 15,904

திண்டுக்கல் -16,648

புதுக்கோட்டை - 14,232

கள்ளக்குறிச்சி - 13,037

நாகப்பட்டினம் - 14,444

தென்காசி - 12,518

நீலகிரி - 10,217

கிருஷ்ணகிரி - 16,200

திருப்பத்தூர் - 10,593

சிவகங்கை - 9,058

தருமபுரி - 10,268

ராமநாதபுரம் - 9,089

கரூர் - 8,485

அரியலூர் - 5,772

பெரம்பலூர் - 2,776

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,001

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,074


ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க : தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் முக்கிய ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details