சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று (ஆக.23) தமிழ்நாட்டில் புதிதாக 1 லட்சத்து 52 ஆயிரத்து 447 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஆயிரத்து 604 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 2 ஆயிரத்து 489 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 18 ஆயிரத்து 887 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் தனியார், அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த 25 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 734 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
சென்னை - 5,42,729
கோயம்புத்தூர் - 2,33,444
செங்கல்பட்டு - 1,64,564
திருவள்ளூர் - 1,15,273
சேலம் - 95,606
திருப்பூர் - 89,750
ஈரோடு - 97,438
மதுரை - 73,894
காஞ்சிபுரம் - 72,553
திருச்சிராப்பள்ளி - 73,925
தஞ்சாவூர் - 70,238
கன்னியாகுமரி - 60,779
கடலூர் - 61,939
தூத்துக்குடி - 55,397
திருநெல்வேலி - 48,350
திருவண்ணாமலை - 53,087
வேலூர் - 48,676
விருதுநகர் - 45,704
தேனி - 43,140