சுகாதாரத் துறை நேற்று (ஏப்ரல் 27) வெளியிட்ட செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் புதிதாக 15,830 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் மட்டும் கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 46 பேரும், தனியார் மருத்துவமனையில் 31 பேரும் என 77 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 13 ஆயிரத்து 728 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 14,043 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது லட்சத்து 90 ஆயிரத்து 919 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து எட்டாயிரத்து 855 பேர் கரோனாவிற்கு ச்சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சென்னையில் 4,640 பேரும், செங்கல்பட்டில் 1,181 பேரும், கோவையில் 996 பேரும் கரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதுவரை இரண்டு கோடியே 18 லட்சத்து 80 ஆயிரத்து 233 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 11 லட்சத்து 13 ஆயிரத்து 502 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:
சென்னை - 3,18,614
கோயம்புத்தூர் - 75,293
செங்கல்பட்டு - 76,275
திருவள்ளூர் - 57,189
சேலம் - 39,873
காஞ்சிபுரம் - 36,790
கடலூர் - 29,363
மதுரை - 29,005
வேலூர் - 25,807
தஞ்சாவூர் - 24,578
திருவண்ணாமலை - 23,163
திருப்பூர் - 25,111
கன்னியாகுமரி - 20,995
திருச்சிராப்பள்ளி - 22,028
தூத்துக்குடி - 21,629
திருநெல்வேலி - 22,428
தேனி - 19,371