சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 883 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,531 பேருக்குக் கரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
மொத்தமாக தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 65 லட்சத்து 39 ஆயிரத்து 642 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 26 லட்சத்து 68 ஆயிரத்து 495 நபர்களுக்கு தொற்றுப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில், 16 ஆயிரத்து 972 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 1,582 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன் மூலமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 26 லட்சத்து 15 ஆயிரத்து 873 என உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று (அக்.3) தனியார், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 650 என உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்தப் பாதிப்பு
சென்னை - 5,50,389
கோயம்புத்தூர் - 2,42,988
செங்கல்பட்டு - 1,69,081
திருவள்ளூர் - 1,17,972
ஈரோடு - 10,21,188
சேலம் - 98,291
திருப்பூர் - 93,268
திருச்சிராப்பள்ளி - 76,218
மதுரை - 74,687
காஞ்சிபுரம் - 74,056
தஞ்சாவூர் - 73,727
கடலூர் - 63,499
கன்னியாகுமரி - 61,847
தூத்துக்குடி - 55,902
திருவண்ணாமலை - 54,424
நாமக்கல் - 50,776
வேலூர் - 49,439
திருநெல்வேலி - 48,959