தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் குடிபோதையில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா! - covid 19 affected drunken man in chennai

சென்னை: அயனாவரத்தில் குடிபோதையில் தவறி கீழே விழுந்து உயிரிழந்த 67 வயது முதியவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அயனாரவரத்தில் குடிபோதையில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா!
அயனாரவரத்தில் குடிபோதையில் உயிரிழந்த முதியவருக்கு கரோனா!

By

Published : Apr 24, 2020, 1:57 PM IST

Updated : Apr 24, 2020, 2:16 PM IST

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் கடந்த 25 வருடங்களாக அப்பகுதியில் வசித்துள்ளார். குடி நோயாளியான அவர், கடந்த 14 ஆம் தேதி அயனாவரம் சபாபதி தெரு அருகே குடித்துவிட்டு நடந்து செல்லும்போது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனால் தலையில் அடிப்பட்ட அவரை அருகிலிருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, கடந்த எட்டு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 22ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் அவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிய அவரது ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் இறந்த நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் இறந்த நபரின் உடலை கொண்டு போகாமல் எரித்துவிட அவரது தங்கையிடம் மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து வாங்கியுள்ளது.

இதையும் படிங்க:காட்டெருமைக்கு உணவளிக்கும் மக்கள்!

Last Updated : Apr 24, 2020, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details